அனர்த்த உதவிக்கு பெற்ற படகை குத்தகைக்கு கொடுத்த கடற்றொழிலாளர் சங்க சமாசம்
வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்திடம் இருந்து அன்பளிப்பாக அனர்த்த உதவிக்கென பெற்றுக் கொண்ட இரு படகுகளை சமாசம் குத்தகைக்கு கொடுத்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது, வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் வடமராட்சி கிழக்கு சமாசத்திற்கு உட்பட்ட அனைத்து துணைச் சங்கங்களுக்கும் இலவசமாக இயந்திரத்துடன் இரு படகுகள் வழங்கப்பட்டன.
அதனடிப்படையில் கடற்றொழிலாளர் சங்க சமாசம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் அனர்த்த நிலையின் போது அவசர உதவிக்காக இலவசமாக இரு படகுகள் வழங்கப்பட்டன.
அனர்த்த உதவிக்கு கொடுத்த படகுகள்
டித்வா புயல் நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி பெரும் உயிரிழப்பை நிகழ்த்திய வேளை வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் சங்க சமாசத்திற்கு அனர்த்த உதவிக்கு கொடுத்த இரு படகுகள் தொடர்பில் மக்களால் ஆராயப்பட்டது.

இதன்போது சமாசம் அனர்த்த நிலைமையின் போது அவசர உதவிக்கு கொடுத்த இரு படகுகளையும் குத்தகை அடிப்படையில் தனது சமாச நிர்வாக உறுப்பினர்களுக்கு கொடுத்துள்ளமை தெரியவந்துள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்க சமாசத்தின் குறித்த தன்னிச்சையானதும், மக்கள் மீது அக்கறை இல்லாத செயற்பாட்டிற்கும் அப்பகுதி கடற்றொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |