கடற்றொழிலாளர்களுக்கு மகிழ்ச்சி தகவல்: நடைமுறையாகும்ஓய்வூதியத் திட்டம்
அடுத்த மாதம் முதல் மீனவர் ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாய காப்புறுதி வாரியம் அறிவித்துள்ளது.
அதன்படி, ஓய்வூதியம் பெறுவதற்கு தகுதியான நபர்களை அடையாளம் காண தற்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாக வாரியத்தின் தலைவர் பிரேமசிறி ஜசிங்கராச்சி தெரிவித்துள்ளார்.
விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியமும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும் இணைந்து இந்த செயல்முறையை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளன.
நிவாரணம்
மீனவர் ஓய்வூதிய முறைசெயலிழக்கச்செய்யப்பட்டபோது, கிட்டத்தட்ட 60,000 கடற்றொழிலாளர்கள் அதனால் பலன்களைப் பெற்று வந்ததாகவும் பிரேமசிறி ஜசிங்கராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், குறித்த மீனவர் ஓய்வூதியத் திட்டம் மீண்டும் தொடங்கப்படும்போது, அந்த எண்ணிக்கையை விட அதிகமான கடற்றொழிலாளர்களுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய மற்றும் விவசாய காப்பீட்டு வாரியத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கைலாச வாகனம்

