இலங்கையில் கரை ஒதுங்கியது இந்திய படகு -காவல்துறை தீவிர விசாரணை
Fishing
Sri Lanka
India
By Jaso
மாரவில, தலவில கடற்கரையில் கடந்த 30ஆம் திகதி பிற்பகல் இந்தியாவைச் சேர்ந்ததாக சந்தேகிக்கப்படும் மீன்பிடி படகு ஒன்று கரை ஒதுங்கியது.
சுமார் முப்பது அடி நீளம் கொண்ட இந்தக் படகில் சுமார் இருபது அடி நீளமுள்ள மீன்பிடி வலை சிக்கியுள்ளது.
இந்த வலையானது பெரிய மீன்களைப் பிடிக்கப் பயன்படும் வலையாகும் என தேசிய கடற்றொழில் கூட்டுறவின் ஊடகப் பேச்சாளர் லோயல் பீரிஸ் தெரிவித்தார்.
ஒரு மாதமாக கடலில்

இந்த மீன்பிடி படகு சுமார் ஒரு மாதமாக கடலில் இருந்திருக்கலாம் என மீனவர்கள் சந்தேகிக்கின்றனர்.
இது தொடர்பில் மீனவர்கள் மாரவில காவல்துறைக்கு அறிவித்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்போதும் அகதிகளாகிக் கொண்டே இருக்கிறோம்…! 18 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்