செம்மணியில் அடுத்தடுத்து வெளிவரும் என்புக்கூடுகள் : 400ஐ கடந்த எண்ணிக்கை
யாழ்ப்பாணம் - செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு நடவடிக்கையின் 30ஆம் நாள் அகழ்வுப் பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்பட்டன.
இன்றைய அகழ்வுப் பணிகளின் போது 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில், புதிதாக 11 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் இன்று வரையிலான அகழ்வு பணிகளின் போது 405 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 377 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அகழ்வுப் பணிகள்
செம்மணி மனிதப் புதைகுழியின் 29 ஆம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று முன்தினம் (19) முன்னெடுக்கப்பட்ட நிலையில் அன்றைய தினம் நீதி அமைச்சர் ஹர்சன நாணயக்கார புதைகுழிப் பகுதிக்கு விஜயம் செய்திருந்தார்.

இதன்போது அகழ்வின் பின்னரான அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கும் நிதிகளை வழங்கத் தயாராக உள்ளதாகவும் புதைகுழி தொடர்பிலான நீதியான விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் ஆதரவாக இருக்கும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |