பசிலை இலங்கைக்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றத்தின் உதவியை நாட அரசாங்கம் முடிவு
மாத்தறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக முன்னிலையாக தவறியதையடுத்து பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை இலங்கைக்கு நாடு கடத்துவதற்காக அமெரிக்க நீதிமன்றங்களின் உதவியை நாடவுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இதற்காக சர்வதேச குற்றப்புலனாய்வு அமைப்பான இன்டர்போல் (Interpol) மற்றும் அமெரிக்க நீதித்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பும் கோரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதித்துறை நடைமுறை
இலங்கையில் விசாரணைக்காக தேவைப்படும் சந்தேகநபர் ஒருவர் வெளிநாட்டில் தங்கியிருந்தால், அவர் எந்த நாட்டின் குடிமகனாக இருந்தாலும், அந்த நாட்டின் சட்ட மற்றும் நீதித்துறை நடைமுறைகளின் ஊடாகவே அவரை இலங்கைக்கு அழைத்து வர முடியும் என அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.

சர்வதேச சட்ட நடைமுறைகளுக்கு அமைவாக தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |