கிளிநொச்சியில் அரச காட்டுக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த ஐவர் கைது
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Shadhu Shanker
அரச காட்டுக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்த குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி - இராமநாதபுரம் பிரிவிற்குட்பட்ட கல்மடு காட்டுப்பகுதிக்குள் அனுமதி இன்றி உள் நுழைந்து மரங்களை வெட்டி இரண்டு உழவுயந்திரங்களில் ஏற்ற முற்பட்ட ஐந்து இளைஞர்கள் இராமநாதபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஐவரும் காவல்துறையினரின் விசாரணைகளின் பின்னர் காவல் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஐவர் கைது
அத்துடன் அவர்கள் வெட்டிய மரங்கள் அனைத்தும் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் காவல்நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 3 மணி நேரம் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்