யாழில் ஐந்து நாள் காய்ச்சல் - பச்சிளம் பாலகனின் உயிர் பறிபோனது
jaffna
death
children
fever
By Sumithiran
யாழில் ஐந்து நாள் காய்ச்சலினால் பீடிக்கப்பட்ட ஒரு வயதும் ஐந்துமாதமுமான ஆண் குழந்தையொன்று பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது.
மீசாலை வடக்கு கொடிகாமத்தைச்சேர்ந்த வாகீசன் விதுசன் என்ற குழந்தையே மரணமடைந்தது.
கடந்த 5 நாட்களாக காய்ச்சல் காரணமாக ஆயுள்வேத வைத்தியம் செய்தபின் நேற்று பிற்பகல் ஐந்து மணிக்கு சாவகச்சேரி வைத்தியசாலை கொண்டு சென்று மேலதிக சிகிச்சைக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு குழந்தை மரணமடைந்தது.
டெங்கு காய்ச்சலால் மரணம் சம்பவித்ததாக அறிக்கையிடப்பட்டுள்ளது. மரணவிசாரணையை நமசிவாயம் பிறேம்குமார் இன்று மேற்கொண்டார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி