ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் பலி
By Dharu
வடக்கு ஜெர்மனியின் ஸ்டேட் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் ஒருவர் சந்தேக நபர் என காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களுக்கு மேலும் அச்சுறுத்தல் இல்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.
அவசரகாலப் பணியாளர்கள்
ஏராளமான அவசரகாலப் பணியாளர்கள் சம்பவ இடத்தில் உள்ளனர் என்றும், அப்பகுதியைத் தவிர்க்குமாறு காவல்துறை தங்களது சமூக ஊடகங்கள் மூலம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த நகரமானது சுமார் 50,000 மக்கள் தொகையைக் கொண்ட ஸ்டேட், ஹாம்பர்க்கிற்கு மேற்கே அமைந்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 8 மணி நேரம் முன்