இலங்கை நோக்கி விரையும் ஐந்து கப்பல்கள்
srilanka
fuel
ships
next week
By Sumithiran
இலங்கைக்கு தேவையான எரிபொருளை ஏற்றிய 05 கப்பல்கள் எதிர்வரும் வாரத்திற்குள் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்த கப்பல்களில் டீசல், பெற்றோல் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் என்பன கொண்டுவரப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
எனவே, நாட்டில் போதுமான எரிபொருள் காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை இலங்கையின் பல மாவட்டங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்ற தகவல்கள் வெளிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்