கிளிநொச்சியில் அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய ஐவர் கைது!
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Laksi
அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் ஐந்து கனரக வாகனங்களும் அதன் சாரதிகளும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி -தர்மபுரம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட கல்லாறு, தருமபுரம், புளியம்பொக்கணை ஆகிய பகுதிகளில் கடந்த 24 மணி நேர சுற்றிவளைப்பின் மூலம் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிணையில் விடுதலை
இதன்போது அனுமதிப் பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் நான்கு கனரக வாகனங்களும் அதன் சாரதிகளும், போலியான அனுமதி பத்திரத்துடன் பயணித்த கனரக வாகனம் ஒன்றும் தருமபுரம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேச நபர்கள் காவல்துறை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |




மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 2 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
5 நாட்கள் முன்
தமிழீழத்திற்குத் தேசிய தொலைக்காட்சியொன்று இருந்தது…
6 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்