சிறிலங்காவின் சிங்கக்கொடி நடுவீதியில் எரிப்பு ( படங்கள்)
burning
Sri Lanka
uk
Flag
By Independent Writer
பிரித்தானியாவில் உள்ள சிறிலங்கா தூதுவராலயத்தின் முன் நடைபெற்ற கரி நாள் போராட்டத்தின் போது சிறிலங்காவின் அடையாளமான சிங்கக் கொடி வீதியில் வைத்து எரிக்கப்பட்டது.
அத்தோடு, தூதரகத்தின் மாடியில் தமிழர் தாயகத்தின் தேசியக்கொடி பறக்க விடப்பட்டிருந்ததையும் இந்தப்போராட்டத்தில் அவதானிக்க முடிந்துள்ளது.
பிரித்தானியாவின் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் போராட்டம் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டவர்கள், சிறிலங்காவின் சுதந்திர நாளுக்கெதிரான பதாதைகளை தாங்கியபடி கண்டனக் கொட்டொலிகளையும் எழுப்பியிருந்தனர்.



