தமிழக வெற்றிக்கழக தொண்டர்களுக்கு விதிக்கப்பட்ட அதிரடி தடை!
மாற்று கட்சியினர் நடத்தும் நிகழ்ச்சிகளில், கட்சியின் தலைவர் மற்றும் பொதுச்செயலாளரின் அனுமதி இன்றி தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் தொண்டர்கள் பங்கேற்க கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடத்தும் கூட்டங்களில் தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் அக்கட்சியின் தொண்டர்கள் பங்கேற்று வருவது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பால் பரபரப்பு
இந்த கூட்டணிக்கான பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமியும் கூட இது குறித்து, "கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டு ஆகிவிட்டது" என்று கூறியதும் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையிலேயே தமிழக வெற்றிக் கழகத்தின் நாமக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் மோகன் மேற்கண்ட தடையை விதித்துள்ளார்.
தொண்டர்கள் பங்கேற்க மாட்டார்கள்
அடுத்து வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டங்களில், தமிழக வெற்றி கழகத்தின் கொடியுடன் அக்கட்சியின் தொண்டர்கள் பங்கேற்க மாட்டார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
