வியட்நாமில் திடீர் வெள்ளப்பெருக்கு : 4 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்!
வியட்நாமில் வடக்குப் பகுதியில் லாய் சாவ் (Lai Chau) மாகாணத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதுடன் நான்கு பேர் காணாமல் போயுள்ளனர்.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து பெய்த கனமழையினால் இந்த வெள்ளப்பெருக்கு திடீரென நேற்று வெள்ளிக்கிழமை (19) ஏற்பட்டுள்ளது.
நான்கு பேர் மாயம்
வெள்ளிக்கிழமை அதிகாலையில் முவாங் தாம் (Muang Tam) கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஏழு பேர் காயமடைந்ததாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டு உள்ளது.

ஜூலை முதல் செப்டம்பர் வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் கொடிய புயல்கள் மற்றும் வெள்ளங்களால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது என எச்சரிக்கபட்டுள்ளது.
கடந்த ஆண்டும் இதே போல வெள்ளப்பெருக்கினால் சுமார் 489 பேர் உயிரிழந்தனர்.
புதன்கிழமை தொடக்கம் பெய்த கனமழையால் நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்குகள் நூற்றுக்கணக்கான வீடுகளைச் சேதப்படுத்தியதோடு, அப்பகுதியில் 238 ஹெக்டேர் (Hectare) பயிர்களையும் நாசமாக்கியதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளது.
வியட்நாம் செய்தி நிறுவனத்தின் அறிக்கையின் படி வடக்கு வியட்நாமின் பல பகுதிகளில் 250 மில்லிமீட்டர் வரை கனமழை பெய்யக்கூடும் எனவும் திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நீதிக்காகக் காத்திருக்கும் ஈழத் தமிழினம்… சர்வதேச நீதி தினம்… 8 மணி நேரம் முன்