இலங்கை மக்களுக்காக தமிழக சிறுமியின் நெகிழ்ச்சியான செயல்(photos)
Sri Lanka Economic Crisis
Tamil nadu
Sri Lanka
Sri Lankan Peoples
By Sumithiran
தமிழகத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது உண்டியல் மூலமான சேமிப்பு பணத்தினை இலங்கை மக்களுக்கு என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்கியுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த பில்சா சாரா எனும் மாணவி வீட்டில் தனக்கென உண்டியலில் சேர்த்து வந்த 4400 இந்திய ரூபாய் பணத்தினை ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சங்கர் லால் குவமத்திடம் வழங்கியுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வசிக்கும் மக்கள் உணவின்றி தவித்து வருவதால் இலங்கை மக்களுக்காக தனது சேமிப்பு பணத்தினை அன்பளிப்பாக வழங்குவதாக சிறுமி கூறியுள்ளார். சிறுமியின் இந்த செயற்பாட்டை மாவட்ட ஆட்சியாளர், பாராட்டி உள்ளார்.




ரணிலின் கைதும் இந்தியாவின் மௌனத்திற்கான பின்புலமும் 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி