தொடரும் மழை நிலைமை: சில பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக மஹா ஓயா மற்றும் தெதுரு ஓயாவின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த முன்னெச்சரிக்கையானது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக பல ஆற்றுப் படுகைகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன பணிப்பாளர் சூரியபண்டார தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமை
பத்தேகம மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் குறிப்பிடத்தக்க மழை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி, களனி, களு, கிங், அத்தனகலு மற்றும் நில்வலா ஆகிய நீர்நிலைகளில் தொடர்ந்தும் மழை அதிகரித்து பெய்து வருவதால் அதன் தாழ்வான பகுதிகளில் அனர்த்த நிலைமைகள் ஏற்படுவதற்கான அச்சம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, அங்குள்ள மக்கள் மிக அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
