மன்னாரில் தொடரும் அசாதாரண நிலை : முன்னெடுக்கப்பட்ட அவசர கலந்துரையாடல்

Mannar Ministry of Defense Sri Lanka Weather Floods In Sri Lanka
By Sathangani Nov 27, 2024 09:02 AM GMT
Report

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக மன்னார் (Mannar) மாவட்டமும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் தொடர்ச்சியாக மழைபெய்து வருகின்றமையால் இதுவரை 14,237 குடும்பங்களைச் சேர்ந்த 49,560 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 25 நலன்புரி நிலையங்களில் சுமார் 2,100 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மன்னார் மாவட்டத்தில் இடம்பெயரும் மக்களின் தொகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவசர கலந்துரையாடல்

இந்த நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரனின் ஏற்பாட்டில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர (Aruna Jayasekara) தலைமையில் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று (27) காலை குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

மன்னாரில் தொடரும் அசாதாரண நிலை : முன்னெடுக்கப்பட்ட அவசர கலந்துரையாடல் | Floods In Mannar Defense Deputy Minister Discuss

இதன் போது வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் (N. Vethanayagan), இராணுவ தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படையினர், காவல்துறை உயர் அதிகாரிகள்,  திணைக்கள தலைவர்கள், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு, பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு முன்னெடுக்கப்பட வேண்டிய அவசர நடவடிக்கை குறித்து ஆராயப்பட்டதுடன் அனர்த்தத்தின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்தம் குறித்தும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் ஆராயப்பட்டது.

பிரதி பாதுகாப்பு அமைச்சர் கோரிக்கை

தொடர்ந்தும் மழைபெய்து வருகின்றமையினாலும் அநுராதபுரம் மற்றும் மல்வத்து ஓயாவில் இருந்து கூடுதலான நீர் வெளியேறுகின்றமையினால் மக்களின் பாதுகாப்பை பலப்படுத்தி முன்னாயத்த நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மன்னாரில் தொடரும் அசாதாரண நிலை : முன்னெடுக்கப்பட்ட அவசர கலந்துரையாடல் | Floods In Mannar Defense Deputy Minister Discuss

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்குவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

எனவே சகல திணைக்களங்களும், முப்படையினரும் இணைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு பிரதி அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



GalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023