வெள்ளம் மற்றும் நிலச்சரிவு -நேபாளத்தில் இயற்கை பேரனர்த்தம்
Nepal
By Beulah
நேபாளதின் கிழக்கு பகுதியில் பெய்த கனமழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதோடு சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 25 பேர் காணாமல் போயுள்ளனர்.
இதனால், பொதுமக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாகன போக்குவரத்தும் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது.
மீட்பு பணிகள்

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகளில், அரசு ஈடுபட்டு வருவதாக அந்நாட்டு காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆசிய நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் அடிக்கடி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படுவது வழமையான விடயம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நினைவுக் குருதியில் தோய்ந்த ஊடக சுதந்திர தினம் 22 மணி நேரம் முன்
உலகமெங்கும் உழைப்பால் தடம் பதிக்கும் ஈழத் தமிழர்கள்…
3 நாட்கள் முன்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி