ஐரோப்பிய நாடுகளை வாட்டும் வெப்பம் : பலி எண்ணிக்கை 1300 ஆக உயர்வு
ஐரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பம் வாட்டி வதைக்கிறது. மக்கள் வெயில் தாக்கத்தை தாங்க முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி இதுவரை 1300 ற்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.
போலந்து, செக்குடியரசு, ஜெர்மனி போன்ற மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கடந்த வாரம் வெயில் கொளுத்தியது. தற்போது அங்கிருந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகளை நோக்கி நகர்ந்துள்ளது.
1874-க்குப் பிறகு டென்மார்க்கில் அதிக வெப்பம்
ஜெர்மனியில் 41 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. செக்குடியரசில் 40 டிகிரி வெயில் வாட்டி வதைத்தது. குளிருக்கு பெயர் போன சுவிட்சர்லாந்தின் பாசல் நகரில் 38.8 டிகிரி வெயில் அடித்தது .
🥵 Germany is literally melting in the heat
— NEXTA (@nexta_tv) June 29, 2026
In Leipzig, the extreme temperatures caused the sealant used around tram tracks to melt. It seeped into the rails and track switches before hardening into large clumps.
This is what the record-breaking heatwave is doing to Germany👇 pic.twitter.com/LfbLkCRGml
டென்மார்க்கில் 1874-க்குப் பிறகு தற்போதுதான் அதிக வெப்பம் பதிவாகியுள்ளது. அதேபோல் நெதர்லாந்திலும் வெயில் கொளுத்தியது. இங்கிலாந்தில் இந்த வருடம் ஜூன் மாதம் இதுவரை இல்லாத அதிக அளவு வெப்பத்தை பதிவு செய்துள்ளது.
வீதிகளில் உருகும் ரயர்கள்
நேற்று ஸ்லோவாகியாவில் 41 டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது. ஹங்கேரியில் 41.8 டிகிரி வெயில பதிவாகியுள்ளது. இந்த வெப்பம் காரணமாக சாலை தார் உருக ஆரம்பித்துள்ளது.
Are they blaming their PM/President for the weather change? pic.twitter.com/Ixu3nqRud4
— Mr Sinha (@Mrsinha) June 29, 2026
பேருந்துகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லும்போது, டயர் உடன் உருகிய தார் ஒரு லேயர் போன்று ஒட்டிக் கொள்கிறது. இதனால் வாகனம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் tram tracks போக்குவரத்து பிரபலம். இந்த போக்குவரத்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |