கொழும்பில் பிரதமர் இல்லத்திற்கு அருகில் பதற்றம்: விசேட அதிரடிப்படை குவிப்பு!
வீதித் தடைகளை அகற்றும் முயற்சி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள கொழும்பு பிளவர் வீதியில் காவல்துறையினரால் போடப்பட்டுள்ள வீதித் தடைகளை அகற்றும் முயற்சியில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பினரே போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
ஹிருணிக்கா தலைமையிலான பெண்கள் குழு
இன்று காலை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட இல்லம் அமைந்துள்ள வீதி மூடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர தலைமையிலான பெண்கள் குழுவினரே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
தாய்மாரின் போராட்டம் என்ற கருப்பொருளில் இந்த முற்றுகைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது இந்த நிலையிலேயே குறித்த வீதி மூடப்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

