இன்றுகாலை அமைச்சர்களுக்கு பறந்த குறுந்தகவல்
ministers
udaya gammanpila
s.m.s
By Sumithiran
எதிர்க்கட்சி தனக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தமைக்கு நன்றிக்கடன் செலுத்தும் வகையில் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சர் உதய கம்மன்பில விருந்துபசாரம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.
எனினும் இந்த இராவிருந்து இரண்டாவது முறையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் கம்மன்பில, இந்த விடயத்தை இன்று காலையில் அனைத்து அமைச்சர்களுக்கும் குறுந்தகவல் ஊடாக தெரிவித்துள்ளார்.
அதன்படி 19ஆம் திகதி தலவத்துகொடையிலுள்ள நட்சத்திர விடுதியில் இந்த இராவிருந்து ஏற்பாடாகியிருந்தது.
கடந்த 05ஆம் திகதி நடத்தப்படவிருந்த இந்த விருந்து 19ஆம் திகதிக்கு மாற்றப்பட்டது. எனினும் நாட்டில் நிலவிவரும் நிலைமையை கருத்திற்கொண்டு மீண்டும் ஒருமுறை விருந்து வழங்கலை அமைச்சர் ஒத்திவைத்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி