அழையா விருந்தாளியாக சென்ற சரத் பொன்சேகா : மறுக்கப்பட்ட வாய்ப்பு
SJB
Sajith Premadasa
Sarath Fonseka
By Sumithiran
தன்னை கட்சியின் தவிசாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கு எதிராக தடை உத்தரவை பெற்றுக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா, கம்பகா மஹரவில் கட்சியின் தலைமையகத்தால் நடத்தப்பட்ட பேரணியில் எவரும் எதிர்பார்க்காத வகையில் கலந்து கொண்டுள்ளார்.
எனினும் அவருக்கு இந்த பேரணியில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்படாமலேயே அவர் கலந்து கொண்டதாக கட்சியின் உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பொன்சேகாவுடன் கலந்துரையாடாத எம்.பிக்கள்
இந்த பேரணியில்,பொன்சேகாவுக்கு முன்வரிசை ஆசனம் வழங்கப்பட்ட போதிலும், கட்சியின் எம்.பி.க்கள் பொன்சேகாவுடன் கலந்துரையாடவில்லை என அறியமுடிகிறது.
மறுக்கப்பட்ட வாய்ப்பு
பொன்சேகா தம்மை உரை நிகழ்த்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிய போதும் அவருக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

1ம் ஆண்டு நினைவஞ்சலி