அடுத்த ஆண்டு உணவுப் பொருட்களின் விலை தொடர்பில் வெளியான தகவல்
இலங்கையில் எதிர்வரும் நாட்களில் உணவுப் பொருட்களின் விலை 50 ரூபாயினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பைக் கொண்டே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வற் வரி
சந்தையில் அரிசி, மரக்கறிகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றின் விலை அதிகரிப்பினால் எதிர்வரும் நாட்களில் அரிசி, பிரைட் ரைஸ், கொத்து போன்றவற்றின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அந்த சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் வற் வரியை 18% ஆக அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையினால் பொருட்களின் விலை சடுதியாக அதிகரிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |