அரச ஊழியர்களுக்கு பேரிடி..! விடுமுறைகளில் ஏற்படவுள்ள மாற்றம்
எதிர்வரும் காலங்களில் அரசு ஊழியர்களுக்கான விடுமுறைகளை குறைக்க இலங்கை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கமைய ஆண்டுக்கு 42 ஆக உள்ள சாதாரண மற்றும் ஓய்வு விடுமுறையின் எண்ணிக்கையை 25 நாட்களாக குறைக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
விடுமுறை நாட்கள்
இதற்கான சட்ட விதிகளை மறுசீரமைக்க ஓய்வூதிய பணிப்பாளர் நாயகம் ஏ.ஜகத் டி.டயஸ் திறந்த மற்றும் பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவிற்கு அறிவித்துள்ளார்.
அதன்படி சாதாரண விடுமுறை நாட்களை 10 ஆகவும், ஓய்வு விடுமுறை நாட்களை 15 நாட்களாகவும் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஓய்வூதியச் செலவு
இதற்காக 40 யோசனைகளை பணிப்பாளர் நாயகம் சமர்ப்பித்துள்ளார். அதில் ஓய்வூதியச் செலவு 11 சதவிகிதம் எனவும், இது அரசாங்கச் செலவில் 10இல் 4 பங்கு எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அந்தச் செலவுகளை நிர்வகிப்பதற்கு முழுப் பொதுத்துறையும் பங்களிக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளத்தை 1000 ரூபாவால் உயர்த்தவுள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
you may like this
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள் |