முட்டாள்தனமான முடிவு - சஜித் தரப்பை வெளுத்து வாங்கிய அநுரகுமார திஸநாயக்க
parliament
anurakumara
samagi jana balawegaya
foolish decision
By Sumithiran
எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை (என்.சி.எம்) ஒரு முட்டாள்தனமான முடிவு என்று ஜே.வி.பி தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்த நம்பிக்கையில்லா பிரேரணை அரசாங்கத்தை மேலும் பலப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
அத்துடன் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஒரு ஊடக விளம்பரம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை நாடாளுமன்றத்தில் பேசிய ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும், நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து அனுர குமார திசாநாயக்க வெளியிட்ட கருத்தை தானும் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி