காவி உடையிடம் சரணடையும் அநுர அரசு - விரைவில் புதிய சட்டம் - தொடரும் பிக்குகளின் அழுத்தம்

Anura Kumara Dissanayaka Buddhism National People's Power - NPP NPP Government
By Thulsi Oct 12, 2026 04:28 AM GMT
Report

நாட்டில் இனப்பதற்றத்தை திட்டமிட்டு உருவாக்குவதற்கு கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் பயன்படுத்தப்பட்டதாக ஜன பலய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.

மற்றொரு பிக்குவின் காவி உடையை அகற்றுவதற்கான அதிகாரம் பௌத்த பிக்குக்களுக்கு மட்டுமே உள்ளது என்று கோட்டே மகாநாயக்க தேரர் இட்டபன தம்மலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள பௌத்த துறவிகள் சிறைச்சாலை வளாகத்திற்கு வெளியே அழைத்துச் செல்லப்படும் போது அவர்கள் சார்ந்த பௌத்த பீடங்களின் பரிந்துரைகளுக்கு உட்பட்டு காவி ஆடை அணிவதற்கு அனுமதி அளிக்கும் வகையில் புதிய விதிகளை வரைவு செய்யும் பணிகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

காவி உடையை அகற்றும் அதிகாரம் யாரிடம் …! தொடரும் சர்ச்சை

காவி உடையை அகற்றும் அதிகாரம் யாரிடம் …! தொடரும் சர்ச்சை

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

இந்நிலையில் சர்ச்சைக்குரிய ஞானசார தேரர் மற்றும் பிக்குகளின் மத உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மகா சங்கத்தினரின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட நடைபயணம் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

[காவி உடையிடம் சரணடையும் அநுர அரசு - விரைவில் புதிய சட்டம் - தொடரும் பிக்குகளின் அழுத்தம் | Footmarch Calling For Gnanasara Thero S Release]

கண்டி ஸ்ரீ தலாதா மாளிகைக்கு முன்பாக கடந்த 10 ஆம் திகதி இந்த நடைபயணம் ஆரம்பமானது முதல் நாளில் கடுகன்னாவயையும் இரண்டாவது நாளில் கேகாலையையும் அடைந்தது.  இன்று (12) மூன்றாவது நாளாக கேகாலை நகரத்தில் ஆரம்பமாகும் இந்த பாதயாத்திரை, வரக்காபொல நகரைச் சென்றடையவுள்ளது. 

இந்த நடைபயணம் கேகாலை, வரக்காபொல, நிட்டம்புவ, கடவத்தை ஆகிய நகரங்களைக் கடந்து, எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பைச் சென்றடையவுள்ளது.

இவ்வாறான பின்னணியில், சிறை தண்டனை பெறும் பௌத்த பிக்குகள் தொடர்பான புதிய சட்ட விதிகள் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்றப்படவுள்ளதாகவும், அதற்கமைய இனிவரும் காலங்களில் பிக்குகள் குறித்த அந்தந்த பீடத்தின் அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவி உடையுடன் வெளியில் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்

22 பில்லியன் நஷ்டத்தில் லங்கா சதொச...! சபையில் அம்பலம்

காவி ஆடையுடன் வெளியே 

அதன்படி, பிக்கு ஒருவர் நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்திற்கு சிறைத்தண்டனை விதிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அவர் சார்ந்த பீடங்கள் அல்லது பிரிவுக்கு அது குறித்து அறிவித்து, அந்த பீடம் அல்லது பிரிவின் கருத்துக்களுக்கு அமைவாக அவரை பகிரங்கமாக வெளியில் அழைத்துச் செல்வதற்குப் பொருத்தமான விதிகளை உருவாக்குவது பொருத்தமானது என மகா சங்கத்தினர் யோசனை தெரிவித்தனர்.

காவி உடையிடம் சரணடையும் அநுர அரசு - விரைவில் புதிய சட்டம் - தொடரும் பிக்குகளின் அழுத்தம் | Footmarch Calling For Gnanasara Thero S Release

இதன் மூலம் இந்தச் சலுகையை எவரும் தவறாகப் பயன்படுத்துவதற்கு வாய்ப்பு இருக்காது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விதிகளை எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுவதுடன், அதற்கமைய இனிவரும் காலங்களில் பிக்குகள் தொடர்பாக உரிய நிகாய அல்லது பிரிவின் பரிந்துரையின் பேரில் காவி ஆடையுடன் வெளியே அழைத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது  

யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

யாழில் இரு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!



you may like this


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026