இலங்கையில் ஒளிபரப்பை நிறுத்திய வெளிநாட்டு அலைவரிசைகள்(photo)
srilanka
suspended
foreign channels
By Sumithiran
நாட்டில் நிலவும் அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக சில வெளிநாட்டு அலைவரிசைகள் தமது ஒளிபரப்பை நிறுத்திவிட்டதாக PEO TV தெரிவித்துள்ளது.
நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு வெளியிட்ட அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
அந்நியச் செலாவணியில் பணம் செலுத்துவதில் தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட சிரமங்கள் காரணமாக அலைவரிசைக்கு சொந்தக்காரர்கள் ஒளிபரப்பை நிறுத்திவிட்டதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PEO TV தனது வாடிக்கையாளர்களுக்கு தனது வருத்தத்தை தெரிவித்துள்ளதாகவும், விரைவில் சேவையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் அது மேலும் கூறியுள்ளது.
இது தொடர்பான அறிவிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி