பெரும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி! 740 மில்லியன் கொள்ளையடித்துள்ள நபர்
ருமேனியாவில் வேலை வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி வேலை தேடுபவர்களிடமிருந்து ரூ.740 மில்லியனுக்கும் அதிகமாக மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மஹரகமவில் உள்ள ஒரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவருக்கே நவம்பர் 14 ஆம் திகதி வரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) எதிராக சுமார் 470 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சரணடைந்த சந்தேக நபர்
அதனைதொடர்ந்து, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் முறைப்பாடுகளை விசாரணைக்காக சிஐடிக்கு அனுப்பியுள்ளது.

எவ்வாறாயினும், கடந்த 30 ஆம் திகதி தனது சட்டத்தரணகள் மூலமாக நீதிமன்றத்தில் சரணடைந்த சந்தேக நபர், மறுநாள் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கூறப்படும் மோசடியில் மற்றொரு முக்கிய நபராக அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரின் மனைவி மீது சட்ட நடவடிக்கை எடுத்து, அவரை நீதிமன்றத்தில் முற்படுத்தமாறு நீதிபதி சிஐடிக்கு உத்தரவிட்டுள்ளார்.
ருமேனியாவில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை ஏற்பாடு செய்வதாக கூறி, நாடு முழுவதும் உள்ள தனிநபர்களிடமிருந்து இந்த நிறுவனம் பெருமளவில் பணம் வசூலித்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |