வெளிநாட்டு வேலைவாய்ப்பு - பணமோசடியில் ஈடுபட்ட கணவன்,மனைவி கைது
Sri Lanka Police
Crime
By Sumithiran
கட்டாரில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல இலட்சம் ரூபா பணத்தை ஏமாற்றி மத்திய கிழக்கு நாட்டிற்கு தப்பிச் செல்லத் தயாரான கணவன் மனைவி தம்பதியரை களுத்துறை தெற்கு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் வசிக்கும் 27 வயது மற்றும் 25 வயதுடைய தம்பதியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டாருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி
களுத்துறையைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து கட்டாருக்கு வேலை வாங்கித் தருவதாகக் கூறி நான்கரை இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேக நபர்களைகாவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகத்திற்குரிய தம்பதிகள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.