இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு

Sri Lankan Peoples Australia Japan Canada England
By Vanan Apr 18, 2023 11:10 AM GMT
Report

ஜப்பானில் செவிலியர் பணியாளர் சேவையில் தொழில்வாய்ப்புக்களும், இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலிய ஆகிய நாடுகளில் ஹொட்டல்களில் தொழில் வாய்ப்புக்கான சந்தர்ப்பமும், ஜரோப்பாவில் செவிலியர் பணியாளர் தொழில் துறையில் தொழில் வாய்ப்புக்களும், மத்திய கிழக்கில் கட்டிட நிர்மாணத்துறைகளில் தொழில் வாய்ப்புக்களும் பாரியளவில் இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளன.

ஆனால், இந்தத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய பயிற்சி பெற்ற தொழிலாளர்களை வழங்க முடியவில்லை என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இந்த வேலை வாய்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய தேவையான பயிற்சி பெற்ற பணியாளர்களை உருவாக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தொழில் பயிற்சி அதிகார சபைக்கு இடையில் இன்று காலை (18) புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டபோது அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு

இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு | Foreign Job Vacancies England Canada Australia

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், “இந்தப் புரிந்துணர்வு உடன்படிக்கைக்கு அமைவாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் வழங்கப்படும் விதி முறைகளுக்கு உட்பட்டதாக இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபை வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கு தேவையான திறன்களைக் கொண்டவர்களுக்கான பயிற்சிகளை வழங்கும்.

அவர்களுக்கு தேசிய தொழில்முறை தகைமை மற்றும் பிற தொழில்முறை சான்றிதழ்களையும் வழங்கும்.

வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தொழிற்பயிற்சி அதிகாரசபையில் பயிற்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.

இந்த உடன்படிக்கைக்கு அமைவாக , தொழிற்கல்விக்கான மாணவர்களைப் பதிவு செய்தல், அவர்களுக்கு தகுதியான பயிற்சிகளை வழங்குதல், அவர்களின் பயிற்சியை ஒழுங்குபடுத்துதல் மற்றும் சான்றிதழ் வழங்குதல் ஆகிய பணிகள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டதாக அமையும் .

தொழிலாளர்களுக்கான பயிற்சி

இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு | Foreign Job Vacancies England Canada Australia

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் கீழ் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக சட்ட விதிகளுக்கு அமைவாக , வெளிநாடுகளுக்கு தொழிலுக்கு செல்லும் தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்க வாய்ப்பு உள்ளது.

ஆனால் பயிற்சி என்பது எங்கள் முக்கிய பணி அல்ல. இந்த நிறுவனத்தின் முக்கிய பணி வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை ஒழுங்குபடுத்துவதாகும்.

இதேபோன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் நலன்கள் இந்த நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பாகும்.

வேலைவாய்ப்பிற்காக தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான முக்கிய பொறுப்பு கல்வி அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொழிற்பயிற்சி அமைச்சகத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகப் பயிற்சிப் பணியிலிருந்து படிப்படியாக விலகி, தற்போதுள்ள அரச துறையில் உள்ள தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஒப்படைக்க முடிவெடுத்தோம். இது ஒரு கொள்கை ரீதியலான தீர்வாக செயல்படுத்தப்படுகிறது.

புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலன் மற்றும் பாதுகாப்பில் நாம் அதிக கவனம் செலுத்தி செயல்படுகின்றோம்.

தொழிற்பயிற்சி அதிகாரசபை தொழில் பயிற்சிக்காக மூன்று பில்லியன் ரூபாவுக்கும் மேற்பட்ட தொகையை செலவிடுகிறது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தொழில் பயிற்சி மூலம் அதிக வருமானம் பெற்றாலும், தொழில் பயிற்சி அதிகாரசபையுடன் இணைந்து வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்கு திறமையான பணியாளர்களை உருவாக்கி, தொழிலாளர் சந்தைக்கு தேவையான தொழில் பயிற்சியை உருவாக்கி வருகிறது.

வெளிநாட்டு தொழில்வாய்ப்புக்களுக்கு தொழிலாளர்களை அனுப்புவதில், தொழில்வாய்ப்புக்களுக்கு தேவையான பயிற்சியின்மை மற்றும் பெற்ற பயிற்சி வெளிநாட்டு வேலைகளுக்கு போதுமானதாக இல்லை போன்ற பிரச்சினைகளையும் நாம் கண்டறிந்துள்ளோம்.

தொழில் பயிற்சி அதிகார சபையுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு அமைவாக வெளிநாட்டு தொழில்வாய்ப்புகளுக்கு தேவையான தொழிலாளர்களை உருவாக்கும் ஆற்றல் கிட்டும்.

உலக தொழிலாளர் சந்தை

இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு | Foreign Job Vacancies England Canada Australia

இதற்கு அப்பால் , வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு தொர்பான விடயங்களை கையாள்வதுடன், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சம்பாதித்த பணத்தை சரியான வழியில் கொண்டு வரும் திட்டத்திலும் பங்களிப்பு செய்கிறது.

கடந்த ஆண்டு மே மாதத்திற்குள், அந்நிய செலாவணி கையிருப்பு அளவு சுமார் இருநூறு மில்லியன் அமெரிக்க டொலர்களாகக் குறைந்தது. அப்படி வீழ்ச்சி கண்ட நாட்டை எங்களால் கட்டி எழுப்ப முடிந்தது.

வெளிநாட்டுத் தொழிலாளர்களிடமிருந்து மாதாந்தம் நாம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை நாட்டிற்கு கொண்டுவருவதே எமது இலக்காக அமைந்திருந்தது. கடந்த மாதம், புலம்பெயர்ந்த தொழிலாளர்களிடமிருந்து மட்டும் 580 மில்லியன் அமெரிக்க டொலர்களை எம்மால் பெற முடிந்தது.

தற்போது உலக தொழிலாளர் சந்தை இலங்கை தொழிலாளர்களை கோருகிறது. உலக தொழிலாளர் சந்தைக்கு அமைவாக தொழிலாளர்களை எம்மால் வழங்க முடியவில்லை.

இன்று, ஜப்பான் நாட்டினால் கோரப்படும் ஜப்பான் மொழி பயிற்சி பெற்ற தொழிலாளர்களை அங்கு அனுப்ப முடியவில்லை. ஜப்பானுக்கு தேவையான செவிலியர் Nurse களை அனுப்ப முடியவில்லை. இங்கிலாந்து, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள ஹோட்டல் தொழில் துறைக்கு தேவையான ஊழியர்களை அனுப்ப முடியவில்லை.

2030 ஆம் ஆண்டுக்குள் உலக தொழிலாளர் சந்தையில் 35 இலட்சம் செவிலியர்களுக்கான Nurses தேவை உண்டு. இந்த எண்ணிக்கையிலான ஊழியர்களை எங்களால் அனுப்ப முடியவில்லை.

சவுதி அரேபியாவில் கட்டுமானத் துறையில் பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஐநூறு பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டிலான நியோம் சிட்டி என்ற திட்டத்திற்கு ஏராளமான கட்டுமானத் தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள். ஜப்பானில் தகவல் தொழில்நுட்பத் துறையிலும் கோரிக்கை உண்டு.

கொரியாவில் Welders ஊழியர்களுக்கும் பெரும் தேவை உள்ளது. இந்த வேலை வாய்ப்புகளை நாம் பெற்றபோதிலும் அதற்குத் தேவையான தகுதியான பணியாளர்களைக் கண்டறிவதிலும் நெருக்கடி எதிர்நோக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து, கனடா உள்ளிட்ட பல நாடுகளில் இலங்கையர்களுக்கு காத்திருக்கும் வாய்ப்பு | Foreign Job Vacancies England Canada Australia

தொழில் பயிற்சி அதிகாரசபை , கொரியன் டெக் இன்ஸ்டிட்யூட்டுடன் இணைந்து, கிட்டத்தட்ட நானூறு பேரை கொரியாவுக்கு வெல்டர்களாக அனுப்ப முடிந்தது.

கொரியாவின் கப்பல் துறையிலும் ஜப்பானின் கப்பல் துறையிலும் எமக்கு தொழில் வாய்ப்புக்கள் கிடைத்துள்ளன.

கடந்த வாரம் ஜப்பானுக்கான விஜயத்தின் போது , கட்டிட பராமரிப்பு சேவை மற்றும் கட்டுமான துறையிலும் தொழில்வாய்ப்புக்கான சந்தர்ப்பம் கிடைத்தன.

எமக்குக் கிடைக்கும் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளுக்குத் தேவையான பணியாளர்களை உருவாக்குவதற்கு தொழில் பயிற்சி அதிகார சபையின் பூரண ஆதரவை எதிர்பார்க்கின்றோம்” - என்றார்.

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லுவம், Toronto, Canada

13 Sep, 2024
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016