அதிகரிக்கும் ப்ளூ காய்ச்சல்: மீண்டும் அறிமுகமாகும் முககவச பயன்பாடு
ஐரோப்பிய நாடான ஸ்பெயின் முககவசம் பயன்படுத்தும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் கொரோனாவைரஸ் மற்றும் ப்ளூ காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதால் அந்நாடு மீண்டும் முககவசம் பயன்படுத்தும் முறையை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
முக்கியமாக மருத்துவ அமைப்புகளில் முககவசம் அணியும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
முககவச பயன்பாடு
“ஸ்பெயினுக்கு சுற்றுலா செல்லும் பிரித்தானியர்கள், குறிப்பாக மருத்துவ அமைப்புகளுக்குச் செல்லும்போது முககவசம் அணியவேண்டும்.
முககவசம் விதிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு விதமாக இருப்பதால், உள்ளூர் அதிகாரிகளின் ஆலோசனைக்கேற்ப நடந்துகொள்ள வேண்டும்.
தொற்றிலிருந்து தங்களையும் மற்றவர்களையும் காத்துக்கொள்ளுமாறு” பிரித்தானிய வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் கேட்டுக்கொண்டுள்ளது.
கொரோனா தாக்கத்தின் பின்னர் முககவசம் பயன்படுத்தும் முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |