கூட்டம் கூட்டமாக நடமாடித் திரியும் மான்கள் - குவியும் சுற்றுலாப் பயணிகள்
ஜூலை மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 196,845 ஆக பதிவாகியுள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை பிரதான கடற்கரைப் பகுதியை அண்டிய பிரதேசத்தில் அமைந்துள்ள மான் பூங்காவில் நடமாடித் திரியும் மான் இனங்களை பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
உள்நாட்டு - வெளிநாட்டு சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்கு திருகோணமலை மான் பூங்கா முக்கிய பங்காற்றுகின்றது
கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் தன்னிசை்சையாக திறப்பு: தாழ்நில பகுதி மக்களுக்கு எச்சரிக்கை!
சுற்றுலாப்பயணிகள்
திருகோணமலையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கோணேஸ்வரர் ஆலயம், ஃப்ரெட்ரிக் கோட்டை (Fort Fredrick), நகரப் பிரதான பஸ் நிலையம் என நகரின் பல்வேறு பகுதிகளிலும் இவை கூட்டமாக உலா வருகின்றன.
மான் இனங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரினதும் தலையாய கடப்பாடாகும். இந்த மான்களின் நடமாட்டம் வெறும் மான் பூங்காவுடன் மட்டும் முடிந்துவிடுவதில்லை.
இயற்கை மான் இனங்களை பாதுகாப்பதற்காக பலதரப்பட்ட திட்டங்களை அரச தரப்பின் ஊடாக மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடான ஒத்துழைப்புக்கள் காணப்படுகின்றன.
மான்கள் வசிக்கும் அப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வீசப்படும் பொலித்தீன் பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மான்களின் செரிமானத்துக்குப் பொருந்தாத உணவுப் பண்டங்களை அந்த மான்கள் உண்பதால் மான்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
இதனால் சுற்றுப்புறச் சூழலின் தூய்மை பேணப்படவேண்டும் என்றும் உள்ளூர்வாசிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் அறிவுறுத்தப்படுகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |