வெளிநாட்டு பெண் சுற்றுலாப்பயணியிடம் மிகவும் அநாகரீகமாக நடந்துகொண்ட நபர்!
வெளிநாட்டு பெண் சுற்றுலா பயணி ஒருவரிடம் நபரொருவர் அநாகரீகமாக நடந்துகொள்ளும் காணொளியொன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
குறித்த சம்பவம் அருகம்பே - பாசிக்குடா செல்லும் வழியில் திருக்கோவில் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 24 வயதுடைய வெளிநாட்டு பெண்ணொருவரே பாதிக்கப்பட்டுள்ளார்.
சுற்றுலா பயணம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த பெண் நியுசிலாந்து நாட்டை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் கடந்த செப்டம்பர் 24 ஆம் திகதி அவர் இலங்கை வருகை தந்துள்ளார்.
இதையடுத்து, கடந்த ஒக்டோபர் 25 ஆம் திகதி அவர் அருகம்பே பிரதேசத்திற்கு தனது சுற்றுலா பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சுற்றுலாப்பயணி
முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்டிருந்த குறித்த பெண்ணிடம், செல்லும் வழியில் நபர் ஒருவர் மிகவும் அநாகரீகமான முறையில் நடந்துகொண்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த பெண் அந்த இடத்திலிருந்து அவசரமாக புறப்பட்டுள்ளார்.

அத்தோடு, சம்பவம் தொடர்பிலான காணொளியையும் அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குறித்த பெண் சுற்றுலாப்பயணி இது தொடர்பில் மின்னஞ்சல் மூலம் காவல்துறையில் முறைப்பாடு அளித்துள்ளார்.
காவல் கண்காணிப்பாளர்
இது குறித்து விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர், சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயத்தை காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க கூடிய ஒரு நாடாக இலங்கை அங்கீகரிக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |