சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
                                    
                    Sri Lanka Tourism
                
                                                
                    Sri Lanka
                
                                                
                    South Korea
                
                        
        
            
                
                By Sumithiran
            
            
                
                
            
        
    இலங்கைக்கு(sri lanka) சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்த துயர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வெலிகம காவல்துறை பிரிவிற்குட்பட்ட மிரிஸ்ஸ கடலில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நேற்று (13) மாலை இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தில் தென்கொரிய(south korea) நாட்டைச் சேர்ந்த 37 வயதுடைய பெண்ணே உயிரிழந்தவராவார்.
மாத்தறை வைத்தியசாலை
இந்த பெண் அலையில் அடித்துச் செல்லப்பட்ட போது, கரையோரப் பாதுகாப்புப் படையினரும், உயிர்காப்புப் படையினரும் அவரை கரைக்கு அழைத்துச் வந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ள போதும், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
    
                                
            12ம் ஆண்டு நினைவஞ்சலி
        
        
            மரண அறிவித்தல்