வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோருக்கு முக்கிய அறிவிப்பு - வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
Government Of Sri Lanka
Department of Immigration & Emigration
By Dharu
பணிப்பெண்களாக வெளிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மாருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2 வயதிற்கும் மேற்பட்ட பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.
பாதுகாப்பிற்கு முன்னுரிமை
பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி சட்ட ரீதியான முறையில் வெளிநாடுகளுக்கு பயணிக்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்