திடீரென சிறிலங்காவுக்கு படையெடுத்து வரும் பெருமளவிலான வெளிநாட்டவர்கள்!
சிறிலங்காவுக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக சுற்றுலா அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி (Siripala Hettiarachchi) தெரிவித்துள்ளார்.
அதன்படி நாளொன்றுக்கு 3000ஐ தாண்டியுள்ளதாகவும் இந்தியாவில் இருந்தே அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து வெளியிடுகையில்,
ஒகஸ்ட் மாதத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டமை காரணமாகவே இந்த உயர்ந்த இலக்குகளை அடைய உதவியது.
இதன்படி, செப்டம்பர் - 13,000, அக்டோபர் - 22,000 +, நவம்பர் - 44,000 + மற்றும் டிசம்பர் (இன்று வரை) 44,000 + சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளனர். 2021 ஜனவரி முதல் இன்று வரை சுமார் 150,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு 200,000 வருகையை இலக்காகக் கொண்டுள்ளதாகவும், ஆண்டின் இறுதியில் (2021) குறைந்தபட்சம் 175,000 முதல் 185,000 சுற்றுலாப் பயணிகளின் வருகை எட்டப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.