யார் பார்த்த வேலையப்பு இது??
‘இரவல் சீலை வாங்க சின்னாத்தா வீட்டுக்குப் போனா.. அவ இடுப்புக்கந்தையோட வெளியில வந்தளாம்..’
‘பொருளாதாரத்தில நாடு பாதாளத்துக்குப் போகுது, கடன் கிடன் குடுங்க சாமி..’ எண்டு இலங்கை ஊர் ஊரா ஒருபக்கம் பிற்சையெடுத்துக்கொண்டு திரிய, யாரோ ஒரு குறுக்காலபோனவன் பார்த்துவிட்டுப்போன ஒரு வேலைய நினைக்க கோபமும் வருது.. சிரிப்பாகவும் இருக்கு.
இலங்கையின் கடனை மீளத் திருப்பிச் செலுத்த 5வருட காலத்திற்கு சீனா அவகாசம் குடுத்துவிட்டதாக ஒரு செய்தி வந்ததல்லோ. அது பொய்யாமாம்.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு தொடர்பாக இலங்கையின் ஜனாதிபதி மற்றும் நிதிமமைச்சருக்கு சீன தூதரகத்தின் உத்தியோகபூர்வ கடிதத் தலைமைப்பைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் வெளியான கடிதம் போலியானது என்று கொழும்பில் உள்ள சீனத்தூதரகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட அந்தக் கடிதத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனைத் திருப்பிச்செலுத்த 5 வருடகால அவகாசம் வழங்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
சர்வதேச நாணயநிதியத்திடம் இருந்து நிதியுதவி பெறும் முயற்சியில் இலங்கை தனது சர்வதேச கடன்வழங்குனர்களிடம் கடன் மறுசீரமைப்புக்காக பேசிக்கொண்டிருக்க, யார் பெத்த புள்ளையோ இதுபோன்ற ஒரு போலிக்கடிதத்தை உலாவ விட்டிருக்குது.
மனுசனுக்கு குசும்பு இருக்கத்தான் வேனும்… ஆனா இந்த அளவுக்கு இருக்கக்கூடாது..