கூலிக் கொலையாளிகளாக செயல்படும் இராணுவ கமாண்டோ முன்னாள் வீரர்கள்
இராணுவ கமாண்டோ படையில் இருந்து தப்பிச் சென்ற 18 வீரர்கள், பாதாள உலகத் தலைவர் கெஹல்பத்தர பத்மே தலைமையிலான பாதாள உலகக் குழுவால் கூலிக் கொலையாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இவ்வாறு சேர்க்கப்பட்ட முன்னாள் கமாண்டோக்களில் சுமார் 09 பேர் பேலியகொட குற்றப்பிரிவால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிவைப்படுத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
போதைப்பொருளுக்கு மிகவும் அடிமை
கெஹல்பத்தர பத்மேவின் கும்பலின் மூளையாகக் கருதப்படும் கமாண்டோ சாலிந்தா, முன்னாள் கமாண்டோக்களைப் பயன்படுத்தி ஒரு கூலிக் கொலையாளி குழுவை உருவாக்கியதன் பின்னணியில் மூளையாக செயல்பட்டவர் என்பதும் தெரியவந்துள்ளது.
கூலிக் கொலையாளிகளாக இருக்கும் இந்த முன்னாள் கமாண்டோக்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு மிகவும் அடிமையானவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
பத்மே மற்றும் கமாண்டோ சாலிந்தா ஆகியோர் போதைப்பொருள் மற்றும் மாதாந்த வாழ்க்கைச் செலவுகளை வழங்குவதன் மூலம் அவர்களை கூலிக் கொலையாளிகளாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேலியகொடை குற்றப்பிரிவின் பணிப்பாளர் ரோஹன் ஒலுகல, இராணுவத்தை விட்டு வெளியேறி பத்மேவின் குழுவுடன் தொடர்புடைய பல கமாண்டோ வீரர்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் எதிர்காலத்தில் அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 2 நாட்கள் முன்
