தம்மிக்க ரணதுங்கவுக்கு பிணை - முன்னாள் அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவும் கைதாவார் என அறிவிப்பு!

Sri Lanka Bribery Commission Sri Lanka Law and Order
By Kanooshiya Dec 15, 2025 11:20 AM GMT
Report

புதிய இணைப்பு

பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்கவை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளும் சந்தேக நபரின் சட்டத்தரணிகளும் முன்வைத்த விடயங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேக நபராக, முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவையும் கைது செய்து நீதிமன்றத்தில் மு்ன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

முதலாம் இணைப்பு

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் தம்மிக்க ரணதுங்க, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2017- 2018 ஆம் ஆண்டுகளுக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு எரிபொருள் கொள்வனவு செய்ய இருந்த 03 நீண்டகால கேள்வி மனுக்களை இரத்து செய்து, அதற்குப் பதிலாக அதிக விலையின் கீழ் உடனடி கேள்வி மனுக்களை செயற்படுத்தியதன் ஊடாக, பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சுமார் 800 மில்லியன் ரூபா நஷ்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

புலம்பெயர் தமிழர்களிடம் காணி கோரிய மனோ எம்.பி! அர்ச்சுனா எம்.பியின் பதில்

யாழ் - கொழும்பு தொடருந்து சேவையில் தொடரும் சிக்கல்

யாழ் - கொழும்பு தொடருந்து சேவையில் தொடரும் சிக்கல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்