சட்டவிரோத செயற்பாடு! நீதிச்சேவையில் முற்றாக நீக்கப்பட்ட முன்னாள் பிரதம நீதவான் திலின கமகே
கொழும்பு முன்னாள் பிரதம நீதவானும் மொரட்டுவ முன்னாள் மாவட்ட நீதிபதியுமான திலின கமகேவைப் பதவியிலிருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திலின கமகேயை நீதித்துறைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு நீதிச் சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த அனைத்துக் குற்றச்சாட்டுகளும் விசாரணைகளின் மூலம் நிரூபிக்கப்பட்டு, அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்தே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விசாரணை
சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டியொன்றைத் தம்வசம் வைத்திருந்தமை உட்பட பல குற்றச்சாட்டுகள் அவருக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்தன.

இது தொடர்பான விசாரணைகளைத் தொடர்ந்து ஏற்கனவே அவரது பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், ஒழுக்காற்று விசாரணையில் முன்வைக்கப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாக பெயரிடப்பட்டதை தொடர்ந்து, அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |