வெளிநாடொன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கு 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை
இலஞ்ச ஊழல் வழக்கில் கொலம்பியாவின் (Colombia) முன்னாள் ஜனாதிபதி இவாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறை தண்டனை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சாட்சியங்களைக் கலைக்க முயன்றது உள்ளிட்ட அவா் மீதான குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்திய நீதிமன்றம், இந்தத் தீா்ப்பை அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள்
எனினும், அரசியல் நோக்கங்களுக்காக தனக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறிய உரிபே, தீா்ப்பை எதிா்த்து மேல்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
2002 முதல் 2010-ஆம் ஆண்டுவரை அமெரிக்க ஆதரவுடன் கொலம்பியாவை ஆண்டு வந்த இவாரோ உரிபே, மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டதாகவும், 1990-களில் ஆயுதக் குழுக்கள் வளா்வதற்குக் காரணமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இது தொடா்பான வழக்கில் தனக்கு எதிரான சாட்சியங்களைக் கவர அவா் இலஞ்சம் கொடுக்க முயன்றதாக தற்போது அவருக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
