தமிழகத்தின் முன்னாள் துணை முதலமைச்சரின் மனைவி மாரடைப்பால் மரணம்!
India
Tamil Nadu
O. Panneerselvam
By Chanakyan
அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி மாரடைப்பால் தனது 63ஆவது வயதில் இன்று காலமானார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமிக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதையடுத்து விஜயலட்சுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவருக்கு மனைவியும், 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.