தேசிய மக்கள் சக்தியுடன் இணைந்த தமிழரசின் முன்னாள் உறுப்பினர்
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் சிவப்பிரகாசம் காண்டீபன் தற்போது தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எருவில் வட்டாரக் கிளையின் தலைவராக செயற்பட்டு அக்கட்சியிலேயே கடந்த உள்ளூராட்சி மன்றத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உறுப்பினராக செயற்பட்டார்.
இந்தநிலையில் தற்போது தமிழரசுக் கட்சியிலிருந்து வெளியேறி தேசிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.
உயர் பதவியில் இருப்பவர்கள்
இந்த செயற்பாடு குறித்து காண்டீபன் தெரிவிக்கையில், ”இலங்கைத் தமிழரசுக் கட்சியின் எருவில் வட்டாரக் கிளையின் தலைவராக நான் செயற்பட்டு அக்கட்சியிலே கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்று சிறந்த முறையில் உள்ளூராட்சி மன்ற உறுப்பினராக செயற்பட்டிருந்தேன்.
ஆனால் அக்கட்சியைப் பிரநிதித்துவப்படுத்தும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர் பதவியில் இருக்கும் சிலர் எனக்குத் தெரியாமேலேயே எனது வட்டாரத்தில் வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்தார்கள்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்
இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும் அதற்கு நான் விண்ணப்பித்திருந்தேன். அப்போதும் எனது விண்ணப்பம் அவர்களால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் போக்கு அண்மைக்காலமாக தன்னிச்சையாக உள்ள நிலையில்தான் நான் அக்கட்சியிலிருந்து உத்தியோக பூர்வமாக வெளியேறி தேசிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளேன்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சியில் எருவில் வட்டாரத்தில் போட்டியிடவுள்ளேன்“ என தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்