விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பகுதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் வசித்து வந்த 55 வயதுடைய இராமப்பிள்ளை கமலராசா (மகேந்தி) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் வீட்டுக்கு முன்பாகவுள்ள பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மரணத்திற்கான காரணங்கள்
சடலம் மீதான பிரேத பரிசோதனை யாழ். போதனா வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை, அவரின் மரணத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும் இவர் இந்தியப் பயிற்சிப் பாசறையில் பயிற்சி பெற்றதுடன் பிற்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முக்கிய பொறுப்பு வகித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
