சுவிட்சர்லாந்தில் நடைபெறவுள்ள விடுதலைப்புலிகள் தலைவருக்கான வீரவணக்கம்! ஆதாரம் கோரும் முன்னாள் போராளி
விடுதலைப்புலிகளின் தலைவர் இறந்தார் என்றால் எங்கள் கண்முன்னே தகுந்த ஆதாரம் முன்வைக்க வேண்டும் என மாவீரர் போராளிகள் குடும்ப நலன் காப்பகத்தின் தலைவர் முன்னாள் போராளி தேவராஜா தீபன் தெரிவித்துள்ளார்.
விடுதலைப்புலிகளின் தலைவருக்கு வீரவணக்க கூட்டத்தை எதிர்வரும் (02.08.2025) புலம்பெயர் தேசத்தில் நடாத்த இருக்கிறார்கள்.
அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்றையதினம் (29.07.2025) பிற்பகல் 12 மணியளவில் முல்லைத்தீவு ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பு ஒன்றினை நடாத்தி கருத்து தெரிவித்தார்.
கண்முன்னே தகுந்த ஆதாரம்
அவர் கருத்து தெரிவிக்கையில், தலைவர் இருக்கிறாரோ இல்லையோ என்பது பிரச்சினை இல்லை. இல்லை என்றால் அதற்கான ஆதாரம் தர வேண்டும்.
எங்கள் கண்முன்னே வாழ்ந்த ஒரு தலைவர் இறந்தார் என்றால் எங்கள் கண்முன்னே தகுந்த ஆதாரம் முன்வைக்க வேண்டும்.
அப்போது தான் வீர வணக்க கூட்டத்தை நடாத்துவதென்ற முடிவுக்கு வரமுடியும். தங்கள் சுயநலங்களுக்கும் தங்களது விருப்பங்களுக்கும் செய்ய முடியாது.
தமிழ் சமூகத்திற்காக நீண்ட காலமாக அர்ப்பணித்து செயற்பட்ட ஒருவர். ஆகையால் நாம் அவ்வாறான முடிவிற்கு வர முடியாது என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
