செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை

Jaffna Sri Lanka chemmani mass graves jaffna
By Raghav Jul 29, 2025 04:41 AM GMT
Report

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளில் சர்வதேச மேற்பார்வை மற்றும் நிபுணர்களின் ஈடுபாட்டை உறுதி செய்யுமாறு சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.

நேற்று (28.07.2025) வரை குறித்த மனித புதைகுழியிலிருந்து சிறுவர்களின் என்புக்கூடுகள் உட்பட 104 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இது குறித்து விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு இந்த அழ்வினை உண்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒரு முக்கியமான படியாக விபரித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர் நெடியவனை சந்தித்த அநுர

விடுதலைப் புலிகளின் முன்னணி உறுப்பினர் நெடியவனை சந்தித்த அநுர

சர்வதேச மனித உரிமைகள்

எனினும், அது சர்வதேச மனித உரிமைகள் தரநிலைகளுக்கு ஏற்ப, குறிப்பாக மினசோட்டா நெறிமுறைக்கு ஏற்ப நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை | Legal Experts Make Recommendation To The Gov

ஆதாரங்களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தையும், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும், விசாரணை முழுவதும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

செம்மணி மற்றும் மன்னார் போன்ற பிற இடங்களில் முன்னர் தோல்வியுற்ற விசாரணைகளை மேற்கோள்காட்டி, மனிதப் புதைகுழிகள் தொடர்பான விடயத்தை முறையாக விசாரிப்பதற்கு ஒரு தேசிய சட்ட மற்றும் நிறுவன கட்டமைப்பு இல்லாததை சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு விமர்சித்துள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை | Legal Experts Make Recommendation To The Gov

காணாமல் போனவர்கள் அலுவலகத்தின் அரசியல்மயமாக்கல் மற்றும் பயனற்ற தன்மை குறித்தும் அந்த ஆணைக்குழு கவலை தெரிவித்து, அதன் சுதந்திரத்தை உறுதிப்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களுடன் அர்த்தமுள்ள வகையில் இணைந்து செயற்படவும் அழைப்பு விடுத்துள்ளது.

நீதியை உறுதி செய்வதற்காக, சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு இலங்கை அரசாங்கத்துக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

• சர்வதேச தடயவியல் மற்றும் மனித உரிமைகள் தரநிலைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
• மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகம் மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் போன்ற அமைப்புகளின் சுயாதீன சர்வதேச தடயவியல் நிபுணர்கள் மற்றும் பார்வையாளர்களை ஈடுபடுத்த வேண்டும்.
• பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சட்ட, உளவியல் மற்றும் சமூக பாதுகாப்பு ஆதரவு வழங்கப்பட வேண்டும்.
• எதிர்கால வழக்குகளுக்கான ஆதாரங்களைப் பாதுகாத்து ஆவணப்படுத்த வேண்டும்.
• வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்த சட்டத்தை தெளிவான வழிகாட்டுதல்களுடன் முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
• அரச அதிகாரிகளால் கடுமையான குற்றங்களை விசாரிக்க சுயாதீனமானதொரு அலுவலகம் உருவாக்கப்பட வேண்டும்.
• கடந்தகால மற்றும் தற்போதைய அனைத்து மனித புதைகுழி விசாரணைகளின் முடிவுகளைப் பகிரங்கமாக வெளியிட வேண்டும் எனவும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.

மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்: தாயும் ஒரு வயது குழந்தையும் படுகாயம்

மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்: தாயும் ஒரு வயது குழந்தையும் படுகாயம்

சர்வதேச மனித உரிமைகள்

இதேவேளை, சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு, ஐக்கிய நாடுகள் சர்வதேச மனித உரிமைகள் பேரவைக்கு சில பரிந்துரைகளை முன்வைத்துள்ளது. 

• எதிர்வரும் செப்டம்பர் - ஒக்டோபரில் நடைபெறவிருக்கும் அதன் 60வது கூட்டத்தொடரில், செம்மணி புதைகுழி அகழ்வு போன்ற அண்மைய முன்னேற்றங்களைப் பிரதிபலிக்கும் வகையில், இலங்கை மீதான அதன் தீர்மானத்தை புதுப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம்! சர்வதேசத்திடம் இருந்து வெளிவந்த கோரிக்கை | Legal Experts Make Recommendation To The Gov

• அத்துடன், தொடர்ச்சியான தண்டனை விலக்கு மற்றும் இலங்கையின் சர்வதேச சட்டக் கடமைகளுக்கு இணங்க இலங்கையின் பொறுப்புக்கூறல் திட்டத்திற்கான ஆணைகள் நீடிக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைத்துள்ளது.  

இதேவேளை, செம்மணி விசாரணையை இலங்கை எவ்வாறு கையாளுகிறது என்பது நிலைமாறுகால நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அதன் உறுதிப்பாட்டின் முக்கிய சோதனையாக இருக்கும் என்று சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு உண்மை, நீதி மற்றும் மீண்டும் நிகழாமைக்கான உத்தரவாதங்களை அரசாங்கம் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.

ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ள ஈரான்

ஆயிரக்கணக்கான மக்களை படுகொலை செய்ய திட்டமிட்டுள்ள ஈரான்

கிறிஸ்தவ தேவாலயத்தில் அடாவடி: கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கிறிஸ்தவ தேவாலயத்தில் அடாவடி: கைதானவர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Brampton, Canada

19 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

கரவெட்டி, நெல்லியடி

10 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

நாரந்தனை மேற்கு, வசாவிளான், Jaffna

10 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, காங்கேசன்துறை

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ivry-sur-Seine, France, Limeil-Brévannes, France

15 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Chelles, France

13 Sep, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வேலணை 5ம் வட்டாரம்

13 Oct, 2023
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், லியோன், France, சுவிஸ், Switzerland, இலங்கை

13 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016