குருநாகல் முன்னாள் மேயருக்கு கடூழிய சிறைத்தண்டனை : வெளியான காரணம்
குருநாகல் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த தீர்ப்பானது குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் இன்று(14) விடுக்கப்பட்டுள்ளது.
குருநாகல் நகரில் அமைந்துள்ள புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்ததாக குறித்த சந்தேக நபர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
நீதிமன்ற தீர்ப்பு
இந்த நிலையில், இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையின் போது முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட 5 பிரதிவாதிகளுக்கு 03 வருட கடூழிய கடூழிய சிறைத்தண்டனை விதித்து குருநாகல் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
புவனேகபாகு மன்னர் காலத்து ராஜசபை கட்டடத்தை இடித்தமைக்காக குருநாகல் மாவட்டத்தின் முன்னாள் மேயர் துஷார சஞ்சீவ விதாரண உள்ளிட்ட சிலருக்கு எதிராக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |