பேரணி மேடையில் கைத்துப்பாக்கியுடன் முன்னாள் எம்.பி - நடந்த சம்பவம்
உதித லொக்குபண்டாரவிடம் இருந்த கைத்துப்பாக்கி ஒன்றை நுகேகொட காவல்துறை குற்றத்தடுப்புப் பிரிவினர் தமது பொறுப்பில் எடுத்துள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதற்கமைய, அதன் சட்டபூர்வத்தன்மை குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.
கடந்த நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடவில் நடைபெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டத்தின் போது, அவரிடம் இந்தத் துப்பாக்கி இருந்ததாகக் காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.
முதலாம் இணைப்பு
நுகேகொடையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதித் லொக்குபண்டார கைத்துப்பாக்கியுடன் மேடையில் நின்றமை சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

குறித்து விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேற்படி கூட்டத்தில் நாமல் ராஜபக்ஷ எம்.பி. உரையாற்றும் போது அருகில் கழுத்துப் பை ஒன்றை தாங்கியபடி கைத்துப்பாக்கி ஒன்றைச் சுடுவதற்குத் தயார் நிலையில் வைத்திருக்கும் பாணியில் உதித் லொக்கு பண்டார நின்று கொண்டிருந்தமை சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
வாக்குமூலம்
தற்போது சுதந்திரக்கட்சியை பிரதிநித்துவப்படுத்தும் உதித் லொக்குபண்டார அப்படி இருந்தது ஏன்? அவர் நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பு வழங்கினாரா?
அல்லது தற்பாதுகாப்புக்காக அப்படிச் செயற்பட்டாரா என்ற கோணங்களில் நோக்கப்படுவதால் விசாரணைகளை நடத்த தீர்மானித்திருக்கும் பாதுகாப்பு அமைச்சு இது தொடர்பில் அறிக்கையொன்றை நுகேகொடை பகுதிக்குப் பொறுப்பான சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரிடம் கோரியுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் உதித் லொக்குபண்டார மற்றும் நாமல் ராஜபக்ஷ ஆகியோரிடம் வாக்குமூலம் பெறவும் காவல்துறை தயாராகி வருகிறது.
பாதுகாப்பு அமைச்சின் அனுமதி
உதித் வைத்திருந்த கைத்துப்பாக்கி சிலவேளை பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட ஒன்றாக இருந்தாலும் அதனை பொதுவெளியில் அப்படி வைத்திருக்கலாமா?
இது அச்சமூட்டும் செயற்பாடாக அமையாதா? என்ற கோணங்களிலும் விசாரணைகள் நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.
எவ்வாறாயினும், இந்த கைத்துப்பாக்கி ஏந்திய விவகாரத்தை நாமல் ராஜபக்ஷ அறிந்திருக்கவில்லை என பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
பிரபாகரன் செய்த அதே தவறை தற்போது செய்துள்ள தமிழ் புலம்பெயர் சமூகம் 18 மணி நேரம் முன்