ஆயுத களஞ்சியசாலைக்கு பொறுப்பாக இருந்தவரிடமிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்கள்
police
caught
rifle
By Jaso
அமைச்சர் பாதுகாப்புப் பிரிவில் கடமையாற்றி ஓய்வுபெற்ற காவல்துறை பரிசோதகரிடம் கைத்துப்பாக்கி, கைக்குண்டு மற்றும் பல்வேறு வகையான தோட்டாக்கள் என்பன இன்று பிற்பகல் விசேட காவல்துறை குழுவினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் வெலிபென்ன, கல்மட்ட, நவ மாவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஓய்வுபெற்றகாவல்துறை பரிசோதகர் ஆவார்.
ந்தேகநபர், துப்பாக்கி, ஒரு கைக்குண்டு மற்றும் 350க்கும் மேற்பட்ட தோட்டாக்களுடன் வெலிபென்ன காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குறித்த முன்னாள் காவல்துறை பரிசோதகர் காவல்துறையினரின் ஆயுதக் களஞ்சியசாலைக்கு பொறுப்பாக கடமையாற்றி வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்