திடீர் முடிவு - இன்று இரவே நாடு திரும்புகிறார் கோட்டாபய..!
Gotabaya Rajapaksa
Government Of Sri Lanka
Sri Lankan political crisis
Singapore
By Vanan
இலங்கை விரைகிறார் கோட்டாபய
முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் நாடு திரும்புவார் எனக் கூறப்பட்ட நிலையில் இன்று இரவே கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாய்லாந்தில் இருந்து சிங்கப்பூர் ஊடாக இன்று இரவு 11.30 மணியளவில் அவர் வருவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பை வழங்குமாறு பாதுகாப்பு அமைச்சு பணிப்புரை விடுத்துள்ளது.
பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மிரிஹான வீட்டிற்கு இதற்கு முன்னர் வழங்கப்பட்ட பாதுகாப்பை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் பல தடவைகள் கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கான திகதிகள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. ஆனால் பின்னர் அவை ஒத்திவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
YOU MAY LIKE THIS

