அரசாங்கத்திற்கு மகிந்த மீள கையளித்த அரச வாகனங்கள்
Anura Kumara Dissanayaka
Mahinda Rajapaksa
Government Of Sri Lanka
By Dhilak
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ( (Mahinda Rajapaksa) பாவனைக்காக வழங்கப்பட்டிருந்த மேலும் மூன்று வாகனங்கள் மீள கையளிக்கப்பட்டுள்ளன.
குறித்த வாகனங்கள் இன்றையதினம் (21) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த வாகனங்களில் ஒரு காவு வண்டி, ஒரு வான் மற்றும் ஒரு கேப் ரக வாகனம் ஆகியவை அடங்கும்.
சட்டம்
இதேவேளை, கடந்த 19 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் வசமிருந்த எட்டு அரச வாகனங்கள் மீள ஒப்படைக்கப்பட்டன.

இந்த நிலையில், 1986 ஆம் ஆண்டின் நான்காம் இலக்க ஜனாதிபதிக்குள்ள உரிமைகள் சட்டத்திற்கமைய கிந்த ராஜபக்ச இந்த வாகனங்களை ஒப்படைந்துள்ளதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்